Monday, December 7, 2020
திரு. லக்ஷ்மண்
திரு. லக்ஷ்மண்
திரு. லக்ஷ்மண்
திரு. லக்ஷ்மண்
திரு. லக்ஷ்மண்
Saturday, November 28, 2020
திரு. லக்ஷ்மண்
திரு. லக்ஷ்மண்
திரு. லக்ஷ்மண்
Saturday, October 24, 2020
அப்பா
Friday, August 28, 2020
இமய குருவின் இதய சீடன்
ஸ்ரீ எம் அவர்களின் சுயசரிதை நூலிலிருந்து.....
கண்களில் இருந்து அன்பு பொழிய எனது முகவாயை தொட்டு,"வாக்கு வாதங்களும் விவாதங்களும் அளவில்லாததிடம் நெருங்க முடிவதில்லை. அன்பு ஒன்று தான் அதைச் செய்ய முடிகிறது. இதயத்தை திறந்து கிருஷ்ணனை பார். கோபியர்கள் அன்பு காட்டியது போல நீயும் காட்டு.." என்றார் சுவாமி அபேதானந்தர்.
குறிப்பிட்ட சிலர் மட்டும் ஏன் இப்படிப்பட்டதொரு ஒரு அசாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள்? நிர்வாணமாக, அழுக்காக,விநோதமான நடத்தைகள் கொண்டவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம். பைத்தியக்காரர்கள் போலத் தோற்றமளித்தாலும் இந்த ஆண்களும் பெண்களும் புனிதமானவர்கள். இவர்கள் இந்து பாரம்பரியப்படி அவதூதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். சூபி வழிமுறையில் இவர்களெல்லாம் மஸ்தான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவதூதர்களும், மஸ்தான்களும் ஆன்மீகத்தில் மிக உயர்நிலையை எய்தியவர்கள். எப்போதும் இறை தொடர்பிலேயே இருப்பதால், சமூகத்துக்கு கட்டுப்படாமல், அனைத்தையும் உதறிவிட்டு பைத்தியகாரர்கள் போலவே வாழ்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரை, "ஏன் இப்படி பைத்தியக்காரர் போல நடந்து கொள்கிறீர்கள்?என வினவினேன்.
"உன்மத்தம் அற்ற ஒரு மனிதனைக் கூட நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் பைத்தியமாகவே இருக்கிறான்" என்று பதில் கூறினார்.
ஆன்மீகத்தேடல் ஈடுபடுபவர்கள் அற்புதங்கள் நிகழ்த்துபவர்களைக் கண்டு மயங்கி அவர்களின் பின்னால் போய் விடக்கூடாது என்றும், அந்த வகை அற்புதங்களை பெறுவதற்கு ஆசைப்படக் கூடாது என்றும், ஆன்மிக உயர்நிலை எய்திய அனைவரும் எச்சரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். 'புனிதமானவன் என்று சொல்லிக் கொள்பவன் அற்புத சக்திகளை காட்சிப்படுத்தினால் அங்கிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் விரைவாக விலகிச் சென்று விடுங்கள்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூறியிருக்கிறார்.
உணவு அறையிலிருந்து மணி ஒலித்தது. படிக்கட்டில் இருந்து எழுந்தேன். ஆத்மா அதற்குண்டான உணவைப் பெற்றுக் கொண்டு இருந்ததால் அது நிறைவுடன் இருந்தது. உடல் பசியுடன் இருந்தது.
"முட்டாள் சிறுவனே! வழிகாட்டுதலுக்கு, இந்த பௌதிக உடலை நம்பி இருக்க வேண்டியதில்லை. இந்த உடலுக்கு இந்த அளவு அன்பு காட்டி உன்னை இணைத்துக் கொள்ளாதே. உனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகள் எல்லாம், பிறர் ஆதரவு எதுவும் இல்லாமல் சுயேச்சையாக சுதந்திரமாக நீ இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்! உனது கால்களில் தான் நீ நிற்கவேண்டும். ஒரு குருவினையே நம்பி இருப்பதும் கூட ஒரு தடைதான். எந்தவித தடைகளும் இல்லாமல் சுதந்திரமாக இரு." என்றார் பாபாஜி அழுத்தமாக..
அருந்ததி குகையில் தங்கியிருந்த மூன்றாவது நாள் இரவு, கடகடவென்று உருளும் ஒலி ஒன்று கேட்டு விழித்துக் கொண்டேன். இடி என்று நினைத்தேன். பாபாஜி, எப்பொழுதும் போல தூனியை நோக்கியவாறு அமர்ந்திருந்தார். அவரது பின்புறம் எனக்கு தெரிந்தது. அவரது உடலின் உருவ கோடுகள் வரைபடம் போல் தூனியின் ஒளியில் தெரிந்தது.அவரை கடந்து பார்த்தேன்.
இரண்டு மேகங்களுக்கு நடுவில் ஒரு முழு நிலவு போன்ற அளவில் ஏதோ ஒன்று வெளிப்பட்டது . அது நிலவு இல்லை . குளுமையான வெள்ளி நிற வெண்மையான ஒளியை சிந்தும் சந்திரனுக்கு பதிலாக அந்த பொருள் நெருப்பு பந்து போன்று தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது.
அது நெருங்கி வரவர கடகடவென்று ஓசை அதிகமாகிக் கொண்டே வந்தது. அது குகையை நோக்கி வந்து பலத்த இடி ஓசை போன்ற சத்தத்துடன் தூனூயின் மீதே வந்து இறங்கியது.
நான் மிகுந்த பீதியில் இருந்ததால் என்னால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. பாபாஜியோ சிலை போன்று நேராக அசைவோ பதட்டமோ இன்றி அமர்ந்திருந்தார். நான் அவருக்கு குரல் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் எனது தொண்டைக் குரல் நாண்கள் வேலையே செய்யவில்லை . எப்படியோ சமாளித்து எழுந்து அமர்ந்தேன். எனது உடல் முழுவதும் பீதியால் நடுநடுங்கியது . இதுவரை அறியப்படாத காணக் கிடைக்காத ஒரு அற்புத காட்சி ஒன்று கண்முன்னால் விரிந்தது.
இடி இடிப்பது போன்ற சத்தம் அறவே நின்று போனது. திடீரென்று அமைதி சூழ்ந்தது. ஏறத்தாள இரண்டு அடி குறுக்களவு இருந்த அந்த நெருப்பு பந்து செங்குத்தாக இரண்டு பகுதிகளாக பிளந்தது.
அதிலிருந்து வெளிவந்த உருவத்தைப் பார்த்ததும் என் உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தது . அது ஒரு மிகப் பெரிய பாம்பு . நாகப் பாம்பை போன்று படம் எடுத்தவாறு இருந்தது . அது மின்சாரம் போன்ற நீல நிறத்தில் பிரகாசித்தது. ஒளியை ஊடுருவி எளிதில் பார்க்கக்கூடிய வகையில், ஊதா நிற கண்ணாடி போன்ற பொருளால் செய்யப்பட்டது போல் தோற்றமளித்தது . உள்ளே மின்சார இலைகள் எரிந்து கொண்டிருப்பது போல் காட்சி அளித்தது .
பாம்பு போன்று இருந்த அந்த உருவத்தின் கண்கள் ஜொலித்தன . மேலும் அது ஹிஸ் என்று மிருதுவாக சீறிக் கொண்டிருந்தது .
அந்த பாம்பு போன்ற உருவம் தனது விரிந்த படத்தோடு குனிந்து பாபாவின் பாதங்களை தொட்டு கும்பிட்டது. அதைப் பார்த்ததும் எனது பீதி எல்லாம் மறைந்தது. பாபாஜி அதன் படத்தினை தொட்டு ஆசிர்வதித்தார் . அதன்பிறகு பாபாஜியும் பாம்பு போலவே உஸ் என்று மெதுவாகச் சீறி அதற்கு பதில் அளித்தார் .
நான் ஏதாவது முட்டாள்தனமான கனவு கண்டு கொண்டு இருக்கிறேனா அல்லது இவையெல்லாம் நனவுதானா?
அந்த நீல நாகப்பாம்பு தன்னை நேர்ப்படுத்திக்கொண்டு பாபாஜியை எதிர்நோக்கி அமர்ந்தது.
உஸ் உஸ் என்ற ஒலியுடன் ஒரு உரையாடல் அவர்கள் இருவருக்கும் இடையே சற்று நேரம் தொடர்ந்தது .
பிறகு பாபாஜி திடீரென்று," மது, முன்னால் வந்து சர்ப்பலோகத்துத் தலைவரின் பிரதிநிதியை பார் என்றார். திடுக்கிட்டேன் . இருந்தாலும் முன்புறம் வந்து பாபாஜியின் பின்னே ஜாக்கிரதையாக உட்கார்ந்து கொண்டேன் .
பாம்பு உஸ் என்று சீறியது. "நாகராஜனுக்கு தலை குனிந்து வணக்கம் செய்"என்று அவர் கூறினார்.
பாம்பின் முன்னால் கீழே வளைந்து வணங்கினேன். நெருக்கமாக இருந்த அந்த சமயத்தில் அந்த பாம்பு மிகப்பெரியதாகவும், ஜுவாலை போல பிரகாசித்த, புத்திசாலித்தனம் நிறைந்த கண்களைப் பெற்று இருந்ததையும் கவனித்தேன். பாம்பு உஸ் என மெதுவாக சீறிய வாறு அதன் இரட்டை நாக்கினால் எனது தலையைத் தொட்டது. என்னுள் இப்போது கொஞ்சமும் பயம் இல்லாமல் போனதை உணர்ந்தேன். சாந்தமான ஒரு மின்சார அதிர்ச்சி என் உடல் முழுவதும் பாய்வதை உணர்ந்தேன்.
திடீரென அது நகர்ந்து கோளத்தினுள் நுழைந்து கொண்டது .இரண்டு பகுதிகளும் இணைந்து மூடிக்கொண்டது. கடகட என்னும் இடி போன்ற சத்தத்துடன் அந்தக் கோளம் எழும்பி விரைவிலேயே மேகங்களினூடே மறைந்தது. பாபாஜியிடம் என்னால் இதனைப்பற்றி கேட்காமல் இருக்கமுடியவில்லை. "பாபாஜி, நடந்ததைப் பற்றி யாரிடமாவது கூறினால் அவர்கள் என்னை பைத்தியமென்றும், ஏதோ கற்பனை கதையை சொல்கிறேன் என்றும் நினைப்பார்கள். இந்த சம்பவத்தை எனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். ஆனால் தயவு செய்து விளக்குங்கள்.."என்று வேண்டினேன்.
"சரியாகத்தான் சொன்னாய். உனது இந்த அனுபவத்தை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனாலும், உனது சுய சரித்திரத்தை எழுதும் பொழுது இதைப் பற்றி மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். யார் நம்புகிறார்கள் யார் நம்பவில்லை என்பதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதைப் பற்றி உனக்கு விளக்குகிறேன் . உண்மை பல நேரத்தில் கற்பனையை விட வினோதமாக இருக்கும்..
"பால் வண்ண வான் பாதையில் நட்சத்திர மண்டலத்தில் 18 சந்திரன்களும் ஏழு கிரகங்களும் இருக்கின்றன. ஒரு கிரகத்தின் பெயர் சர்ப்பலோகம். இதில் மிகவும் உயர் நிலையில் இருக்கும் பாம்புகள் வசித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாம்புகள் எல்லாமே நாக தேவதைகள்.நீ பார்த்த அந்தப் பெரியவர் சர்ப்ப லோகத்தின் துணைத் தலைவர் ஆவார். அவர் நாகராஜா என்று அழைக்கப்படுகிறார்.ஐந்து தலை கொண்ட ஒரு தங்க பாம்பு தான் இந்த சர்ப்ப லோகத்தின் தலைவர். அவர் இந்திய புத்தகங்களில் ஆனந்தா என்று குறிப்பிடப்படுகிறார்...
"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனம் வெறும் குழந்தைப்பருவ அறிவு வளர்ச்சியை மட்டுமே அடைந்திருந்தது. அப்போது பூமியில் இருந்த மக்களுக்கு சர்ப்ப லோகத்துடன் தொடர்பு இருந்தது.
"உயர்நிலையில் இருந்த அறிவு நிரம்பிய நாகர்கள் பூமிக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார்கள். இங்கேயே நிறைய காலம் தங்கியிருந்து மனிதர்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டும் அறிவு போதனைகளை கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.... "பழமையான எல்லா நாகரீகங்களிலும் பாம்பினை பூஜிக்கும் வழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டு இருப்பாய். அது மனிதர்கள் உயர் விழிப்புணர்வுடன் இருந்த நாகர்களுக்கு செலுத்திய மரியாதையின் வடிவம்தான்! அவர்கள் கொண்டிருந்த விவேகத்திற்காகவும், சூட்சும புத்திக்காகவும் தான் அவர்களை மக்கள் போற்றி வணங்கி வந்தார்கள்...
"நாகர்கள் தான் குண்டலினி சக்தி ரகசியத்தைப் பற்றி முதன்முதலாக கற்றுத் தந்தார்கள். அதுவும் பாம்பு வடிவத்தின் அடையாளமாகத்தான்....
"உலகுக்கு அஷ்டாங்க யோக சூத்திரங்களைக் கொடுத்த பதஞ்சலி கூட ஒரு நாகர் தான்! அவர் பாதி மனிதராகவும் பாதி நாகமாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றார். எகிப்திய பரோஹாவின் தலையிலுள்ள பாம்பும், சிவனைச் சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பும் உயர் அறிவுடைமையையும் உயர் சக்தியையும் கொண்டிருந்த நாகர்களின் அடையாளத்தை குறிப்பிட்டு காட்டுவதேயாகும். சில மனிதர்களுக்கும் இந்த சக்திகளையெல்லாம் நாகா ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து அனுக்கிரகித்திருக்கின்றார்கள்.
" ஆனால் மனிதர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக ஆனதுமே அதிக சுயநலம் கொண்டவர்களாகவும் தந்திர குணம் கொண்டவர்களாகவும் மாறிவிட்டனர். பெரும்பான்மையினர் சுயநலத்திற்காக கொலை புரியவும் தயாராகி விட்டனர்.
" சிலர் நாகர்கள் பெற்றிருந்த சிறப்பான அறிவு மற்றும் ஆன்மிக மேன்மைகளால் தங்களது நிலை என்ன ஆகுமோ என்று பயப்படவும் செய்தனர். மனிதர்கள் நாகர்களிடம் கொண்டிருந்த நன்றிக்கடனை மறந்து அவரிடமிருந்து பெற்ற சக்திகளையே அவர்களுக்கு எதிராக உபயோகித்தனர். ஒரு கால கட்டத்தில் நாயகர்களை அதிக அளவில் படுகொலை செய்தனர். கொன்று குவித்தனர்...
" நாகர்களின் பிரதானமான தலைவர், எஞ்சி இருக்கும் நாகர்களை எல்லாம் பூமியிலிருந்து நாகலோகத்திற்கே திரும்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டார்.சில ஆன்மீக உயர்நிலை மனிதர்களைத் தவிர, மனித இனத்துடன் இருந்த எல்லா உறவுகளையும் துண்டித்தார். ஒரே இரவில், நாகர்கள் அனைவரும் நாடு, கடல் கடந்து சர்ப்பலோகத்திற்கே அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். நோய்வாய்ப்பட்டிருந்த நாகர்களும்,மிக வயதான நாகர்களும், தலைமையை எதிர்த்து கலகம் செய்த சில நாகர்களும் மட்டும் இங்கேயே விடப்பட்டார்கள்...
" இப்பொழுது பூமியில் ஊர்ந்து செல்லும் வகையைச் சேர்ந்த பாம்புகள் எல்லாமே அன்று பூமியில் விட்டுச் செல்லப்பட்டவைகளின் சந்ததிகளே ஆகும். அவைகளே எஞ்சியிருந்த தங்கள் இனத்திற்குள்ளேயே பற்பல வருடங்களாக இனப்பெருக்கம் செய்து,வளர்ச்சியில் தடைப்பட்டு, வீரியம் குறைவாகவும் தங்களது முன்னோர்களின் உயர் குணங்கள் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
"சில உயர் குண மனித இனத்தினருடன் மட்டும் சர்வலோகத்தினர் தொடர்ந்து தொடர்பு வைத்து வருகிறார்கள். ஒரு சமயம் சீரடி சாய்பாபா மூன்று நாட்கள் தனது உடலை விட்டுச் சென்றிருந்தார். நான்காவது நாள் அவர் இறந்து விட்டார் என்று பொதுமக்கள் முடிவெடுத்த போது அவர்கள் வியப்படையும் வண்ணம் பாபா தனது உடலுக்கு திரும்பி வந்தார். அந்த சமயத்தில் பாபா தனது நெருங்கிய நண்பர்களிடம் வேறொரு உலகத்துப் பிரச்சினையை தீர்த்து வைக்க தான் சென்று வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அவர் வேறொரு உலகம் என்று குறிப்பிட்டது சர்ப்ப லோகத்தைத்தான். அந்த பிரச்சினை என்ன என்பதை உனக்கு வெளிப்படுத்த முடியாது! அந்த பிரச்சினை முழுவதுமாக தீர்க்கப்படவும் இல்லை. அது மீண்டும் வந்துவிட்டது. நாகராஜ் குருவிடம் உதவிக்காக சென்றார். அவரது அறிவுரையின் பேரில் என்னுடன் விவாதிப்பதற்காக இங்கு வந்திருந்தார்..."என்று அந்த சம்பவத்தின் பின்னணியை விளக்கினார் பாபாஜி.
"பாபாஜி..இவைகள் எல்லாம் நம்ப முடியாதவைகளாக இருக்கின்றன. நான் எப்போதாவது எனது சுயசரிதை எழுதினால் இதனை படிப்பவர்கள் இதுவெல்லாம் புத்தி சமநிலையில் இல்லாத ஜன்னி பிடித்தவனின் பிதற்றல்கள் என்றோ அல்லது கட்டுக்கதை என்றோ ஒதுக்கி விடலாம். நான் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. நடப்பது நடக்கட்டும்..." என்றேன்.
பாபாஜி சிரித்தார்
. "மறுபடியும் சொல்கிறேன். உண்மை கற்பனையை காட்டிலும் வினோதமாக இருக்கும். இந்தக் கதையை அவர்கள் கற்பனை என்றே கூறட்டும்...
"மக்கள் தற்சமயம் தாங்கள் கொண்டுள்ள விவேகத்தாலும், வறண்ட தர்க்க சாத்திரத்தின் உதவியாலும் உயர்ந்த விழிப்புணர்வு உடைய உயிர்கள் நிறைந்த வேற்று உலகங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் போய்விடக்கூடும். இருப்பினும் பின்னாட்களில் எப்போதாவது ஒரு சமயம் அவை உண்மையிலேயே இருக்கத்தான் செய்கின்றன என்பதை உணர்ந்து கொள்வார்கள்.... "ஆனாலும் நீ உனது சுய சரித்திரத்தை எழுத தயாராகும் பொழுது விஞ்ஞான உலகம் விண்ணுலகை பற்றியும் இதர கிரகங்களை பற்றியும் தனது அறிவாண்மையைப் பெருக்கி இருக்கும்...
"பிரபஞ்சத்தில் இதுவரை எண்ணிப்பார்த்து கூட இருக்க முடியாத இடங்களில் கிடைக்கும் நீர் மற்றும் இதர உயிர்வாழ் ஆதாரங்கள் ஆகியவை இதர கிரகங்களிலும் விண்மண்டலத்திலும் இருப்பது கண்டுபிடிக்கப் படலாம். அங்கே உயிரினங்கள் இருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம் என்று கருத்து வலுவாக ஆரம்பிக்கும்...
"தவறான முன் அபிப்ராயம் இல்லாத ஏதாவது ஒரு விஞ்ஞானி உனது இந்த கதையின் மீது நியாயமான கவனம் செலுத்தலாம்...
" நடைமுறைகளுக்கு ஒவ்வாதவைகளை எல்லாம் விஞ்ஞான ரீதியாக சரியல்ல என்று ஒதுக்கும் முட்டாள்தனமான மனோபாவம் கொண்டவர்களாக இருந்து விட்டால் பிறகு இவைகளை எல்லாம் நம்பவே முடியாமல் போய்விடலாம்!
பாபாஜி, அந்த புனித மனிதரிடம் உடனே நேருக்கு நேராக அவரது பாணியில் பேச ஆரம்பித்தார்.
" சுவாமி! நீங்கள் கற்றிருக்கும் கல்வி மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது தைரியமாக மடாதிபதி பதவியை துறந்த உங்களது செயலையும் மதிக்கிறேன். உங்களது கிரீடத்தையும், தண்டியையும் தூக்கி எறிந்து விட்டீர்கள். இன்றைக்கு ஊர் ஊராகத் திரிகின்ற சாதாரண சன்னியாசியாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களது அறிவுச் சுமையும் பாண்டித்யமும் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு தடையாக இருக்கின்றன. அந்த முழுமுதற் பொருளை, பிரஹ்மனை அடைய முடியாமல் தொலை தூரத்தில் இருக்கிறீர்கள். நான் பேச்சைத் தொடரலாமா?" என்று கேட்டு நிறுத்தினார் பாபாஜி.
"தயவு செய்து கூறுங்கள். நீங்கள் சொல்வதை இப்போதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்.." என்றார் அவர்.
" நீங்கள் பெற்றிருக்கும் அறிவு உங்களினுள்ளே முழுவதுமாக நிறைந்து இருக்கிறது. அதனால் உங்களிடம் நுழைவதற்கு காத்திருக்கிற அந்த உண்மையை பெறுவதற்கு இடமே இல்லை. முன் அபிப்பிராயங்கள் கொண்ட அறிவுச்சுமையை இறக்குங்கள். உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு காலியாக இருங்கள். உண்மையை காண்பீர்கள்."என்று பாபாஜி கூறினார்.
"யார் அறிவை வணங்குகிறார்களோ அவர்கள் இருட்டைத் தழுவுகிறார்கள்' என்ற இஷாவாஸ்ய உபநிஷத ஸ்லோகத்திற்கு உண்மையான பொருள் என்னவென்று நான் பலமுறை யோசித்ததுண்டு. இந்த ஸ்லோகத்தில் காணப்படும் அறிவு என்ற சொல்லுக்கு, முக்கியமற்ற விஷயங்களின் மூலமாகப் பெறும் அறிவு தான் என்று எண்ணி நேரடியான இந்த விளக்கத்தை ஒத்துக் கொள்ளாமல் இருந்து இருக்கிறேன். இப்பொழுது தான் சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். தொடர்ந்து சொல்லுங்கள் ஐயா..." என்று அவர் கேட்டுக்கொண்டார்.
"உண்மை என்னவென்றால், அறிவே உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு தடையாக இருக்கிறது. இதை சற்று விளக்கமாகக் கூறுகிறேன். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விழையும்பொழுது, நாம் என்ன செய்கிறோம்? முதலில் அதை கவனிக்கிறோம். பிறகு அதைப் பற்றி நமது நினைவில் சேமித்துக் கொள்ளுகிறோம்...சரியா...?
" ஆம், ஐயா "என்று ஆமோதித்தார் அந்தப் புனித மனிதர்.
" எக்ஸ் அல்லது ஒய் பற்றி எனக்கு தெரியும் என்று நான் சொல்வேனாகில் அந்த விஷயம் எனது நினைவில் சேமிக்கப் பட்டு விட்டது என்று தான் பொருள். நினைவு என்ற வார்த்தையே கடந்தகால விஷயமாக, இறந்த காலமாக ஆகிவிட்டது. நிகழ்காலத்தில் இல்லவே இல்லை. நினைவு என்பது சேமிக்கப்பட்ட தகவல்கள். எப்பொழுதும் அது இறந்த காலத்தைத் தான் குறிக்கிறது நான் சொல்வது புரிகிறதா?"
"ஆம்."
"நிரந்தர உண்மை என்கிற விஷயம் இறந்தகால நிகழ்ச்சியாக இருக்க முடியாது. உண்மை எப்பொழுதுமே அழிவில்லாமல் இருந்துகொண்டே இருக்கிறது. எனவே அதை நமது நினைவில் சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நினைவு என்பது கடந்த காலம். ஆனால், உண்மை என்பது இப்போது நிகழ்வதைத்தான் குறிக்கும். உண்மை எப்போதும் உயிரோட்டத்துடன் இருந்து கொண்டே இருக்கும். அறிவினால் இதனைத் தொடமுடியாது...சரிதானே?"
"சரிதான் ஐயா"
"நாம் சுமந்து கொண்டிருக்கும் அறிவுப் பெட்டகமான மூளையில், குப்பைகள் எதுவும் இன்றி காலியாக இருக்கும் தருணத்தில் தான் அமைதியாகவும் அசைவு இல்லாமலும் வேறு எதுவாகவும் ஆக முயற்சிக்காமலும் எதையாவது பெறப் போராடாமல் இருக்கும் தருணத்தில் தான், அந்த வெற்றிடத்தில் நிரந்தரமாக இருக்கின்ற அந்த உண்மை என்கிற தெய்வம் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கின்றது."
மிகப்பெரிய அமைதிக்கு பிறகு "ஆஹா!பெரும் அமைதி. இந்த மாதிரி பெரும் அமைதியில், அசைவில்லாமல் என் வாழ்க்கையில் எப்போதுமே அமர்ந்து இருந்தது இல்லை. எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு முறை ஒன்றுமே செய்யாமல் நதியை பார்த்தவாறு இருந்த பொழுது அல்லது தெளிவான ஆகாயத்தை பார்த்தவாறு இருந்த பொழுது அந்த அமைதியின் விளிம்பு வரை சென்று இருக்கிறேன்...!" என்று அந்த முதிய மனிதர் பேசினார்.
பாபாஜி கூறினார், "அந்தப் பெரும் அமைதி உங்களின் மேலே இயற்கையாகவே ஏற்படும் பொழுது அதில் குறுக்கிட வேண்டாம். அப்படியே அமைதியாக இருங்கள். ஸ்ரீ குரு பாபாஜி, உங்களின் மீது ஆசீர்வாதங்களை வழங்கட்டும். அந்த ஆசீர்வாதங்களால் நீங்கள் நிரந்தர உண்மையை கண்டுபிடிக்குமாறு ஆகட்டும். நான் மறுபடியும் உங்களை பார்க்க போவதில்லை. இன்னும் சில தினங்களில் கோமுக்கிற்கு செல்ல இருக்கிறோம்..."என்று கூறிவிட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டார் பாபாஜி.
"எதிலும் தீவிரம் இன்றி மிதமாகத் தணிந்து இருக்கும் வரை அவை எல்லாமும் நல்லதுதான்."
"எல்லா உயிரினங்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பேனாக!"என்பது போதிசத்துவர் உறுதிமொழி.
பகல் நேரங்கள் கடினமான படிக்கும் பணிகளும், ஆழ்ந்த சிந்தனைகளும், உண்ணாநோன்பு களமுமாக கழிந்தன. எனது அகங்காரம் அறுத்து கூறு போடப்பட்டு என் கண்ணெதிரே காட்சிப்பொருளாக தெரியும்வரை மேற்குறிப்பிட்ட பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
பல வருடங்களுக்கு முன்னர் ராமகிருஷ்ணா மடத்தில் நான் பிரம்மச்சாரியாக இருந்த போது, சுவாமி ரங்கநாதர், "ஆசிரமம் என்பது ஒரு சிறிய உலகம். எல்லாவித மனிதர்களை அங்கே நீ சந்திக்கக்கூடும். அவர்கள் எல்லாம் பெரிய சாதகர்கள் என்றோ, அல்லது ஆன்மீகத்தில் மிக உயர்நிலையை எய்திய ஆத்மாக்கள் என்றோ நினைத்து விடாதே. உனது சாதகத்தை, பயிற்சியை உன் பாட்டுக்குச் செய்து கொண்டிரு. எப்போதும் கண்களைத் திறந்து வைத்து விழிப்புடன் இரு!"என்று கூறியது நினைவுக்கு வந்தது.
திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது, ஆன்மிகத்தில் வளர்ச்சி அடைய நினைப்பவர்களுக்கு அப்படி ஒன்றும் விசேஷ தகுதி அல்ல. எதிர்காலத்தில் உன்னிடம் வருபவர்கள் எல்லாம் பெரும்பாலும் திருமணம் ஆனவர்களாகவே இருப்பார்கள். உனக்கே திருமணம் ஆகவில்லை என்றால் திருமண வாழ்க்கையைப்பற்றி அவர்களுக்கு அறிவுரையோ உதவியோ உன்னால் செய்ய முடியாது." என்று கூறி நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
"ஆன்மிகப் பரிணாம வளர்ச்சி என்பது தனிப்பட்ட மனிதனுக்குக் கிடைக்கும் வளர்ச்சியே ஒழிய அது கூட்டமாக நிகழ்த்த முடிகிற அற்புதம் அல்ல. தியான முறைகளுக்கு உரிமை கோருவது எல்லாம் நல்ல பயனைத் தராது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் தனித்தன்மையானவர். பணியாற்றத் துவங்கும் பொழுது சுவரொட்டி விளம்பரங்களும், விளம்பர போர்டுகளும் கூடவே கூடாது" என்றும் கூறுவார்.
ஸ்ரீ குருப்யோ நம
இமயகுருவின் இதய சீடன்
Sunday, August 9, 2020
எல்லாம் ஒன்றே
Tuesday, August 4, 2020
எல்லாம் ஒன்றே
எல்லாம் ஒன்றே
Saturday, July 25, 2020
எல்லாம் ஒன்றே
---------------------------
"எல்லாம் ஒன்றே" என்னும் இந்நூல் வையை.ஆர்.சுப்பிரமணிய ஐயர் அவர்களால் எழுதப்பட்டது. பின்னர்
1935 ஆம் ஆண்டில் மிகவும் கிடைப்பதற்கு அரிதாக இருந்த இந்நூலை பகவான் ஸ்ரீரமணமஹரிஷி சந்நிதானத்தில் பிரசுரம் செய்துள்ளார்கள்.
முகவுரை:
மனிதர்கள் விரும்புவது இன்பம்; வெறுப்பது துன்பம். இதையே மற்றப் பிராணிகளும் செய்கின்றன. ஆகையால், இவ்வளவோடு நின்றுவிட் டவர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், மனிதர்களுக்குள் உயர்ந்த நிலையைப் பெற்றவர்களது கொள்கை என்னவென்றால் - நியாய வழியில் நடக்க வேண்டும்; அப்பொழுது வரும் இன்பமோ துன்பமோ இரண்டையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்- என்பதுதான். இந்த உணர்ச்சி உள்ளவர்களுடைய ஒற்றுமை நீடித்து நிற்குமே யொழிய, மேற்சொன்ன சாதாரண மனிதர்களுடைய ஒற்றுமை நீடித்து நிற்காது. இவ்வுணர்ச்சி யுடையவர்களுடைய ஒற்றுமையினாலேயே உலகத்துக்கு நன்மை உண்டாக வேண்டியிருக்கிறது. இதில், "நியாயம்" என்றால் என்ன?_ என்ற ஒரு கேள்வி மிக அவசியமானது. அதற்கு பதில் எழுதி முடிந்தபாடு எப்பொழுதும் இல்லை; ஏன்? நியாயம் என்பது அந்த அந்த இடம் நோக்கி உணர வேண்டியிருக்கிறது. யார் எவ்வளவு எழுதி வைத்தாலும், அவர்களாலும் விடப்பட்டுப்போன ஒரு இடம் உலகத்தில் நேரிடாமல் இராது. ஆகையால், எந்த ஒரு உணர்ச்சியை அடைந்தால் " நியாயம் என்பது இன்னது" என அந்தஅந்த இடத்துக்குத் தக்கபடி ஒருவனுக்குத் தோற்றுமோ, அந்த ஒரு உணர்ச்சியை ஒவ்வொருவரும் அடையவேண்டியது இன்றியமையாததாயிருக்கிறது.
அது ஒரே உணர்ச்சிதான். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் பல இல்லை. அது ஒன்றாகவே யிருந்தும் அதை உலகத்தார் உணர்வது மிக அருமையாக இருப்பதுதான் இவ்வுலகத்தில் வியப்பை உண்டுபண்ணுகிறது. இதையன்றி வேறு வியப்பு உலகத்தில் இருப்பதாக எனக்குத் தோற்றவில்லை. அந்த ஒரு உணர்ச்சியை " உபநிஷத்துக்கள்" மிக வெளிப்படையாய்ப் போதிக்கின்றன. இந்நூலில், எனக்குத் தோற்றின ஒரு முறையில், அந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறேனேயொழிய, நான் புதிதாக எழுதினது ஒன்றுமில்லை. ஆயினும், இது என் கடமைகளில் ஒன்றாயிருக்கிறது.
இதில் உள்ள அத்தியாயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவனாய் இருக்கையினாலே, ஒன்றில் விடுபட்டுப் போனதாகத் தோற்றும் ஒருவிஷயம் மற்றொன்றில் சொல்லப்பட்டிருக்கும்; வெளிப்படையாய்த் தோற்றாத ஒருவிஷயம், ஆழ்ந்து கவனித்தால் தோற்றும். அதிலும் விளங்காததை மற்ற நூல்களாலும் பெரியோர்களாலும் உணரவேண்டியது வாசிப்போர் கடமைகளில் ஒன்றாயிருக்கிறது.
ஜகஜ்ஜநநி ஸத்குரோபாஹி.