ஏன் ஒரு சமூகம் படுகொலையை கொண்டாடுகிறது? - மீள் பதிவு
**********************************************
'ஏன் உங்க குழந்தைய அடிக்கிறீங்க?
தப்பு பண்ணான் சார் அதான் அடிச்சேன். என் குழந்தை மேல எனக்கு மட்டும் பாசம் இருக்காதா?
'உங்க குழந்தை தப்பு பண்ணலைங்கிறது இல்லை என்னோட வாதம்.நீங்க அதுக்கு அடிக்கிறது தான் தீர்வுன்னு யோசிச்சீங்க இல்லையா? நீங்க கவனிக்க வேண்டியது உங்கள் செவ்வாய் ஆதிக்க மனம் வன்முறை தான் தீர்வுன்னு யோசிச்சதை தான்.
உங்களுக்கு செவ்வாய் ஆதிக்கம் இல்லாம சந்திரன் ஆதிக்கம் இருந்திருந்தா அவன் தப்பு பண்றத பாத்து அடிச்சிருக்க மாட்டீங்க. அழுதிருப்பீங்க.கெஞ்சியிருப்பீங்க. கொஞ்சி சொல்லியிருப்பீங்க.
உங்க செயலுக்கு உங்க குழந்தையின் தப்பு மட்டும் காரணமில்லை. அடக்கு முறை விரும்புற உங்க மனதோட இயல்பு தான் காரணம். அதே போல உங்க பையன் மேல உங்களுக்கு பாசம் இருகுங்கிற உண்மையையும் நான் ஒத்துக்கிறேன் '
**********************************************
சமூகம் என்பது உருவாக அடிப்படை காரணம் சூரியன் ஆதிக்கம் நிறைந்தவர்கள். இன்றும் சூரியன் ஆதிக்கம் நிறைந்தவர் தான் மற்ற மனிதர்களை ஒன்று சேர்த்து எந்த ஒரு இயக்கத்தையும் கட்டமைப்பார்கள். தன் குடும்பம் தன் ஊர் தன் இனம் தன் நாடு போன்ற பல வகையான உணர்வுகள் மூலம் மக்களை ஒன்றினைத்து வாழ முற்படுவார்கள்.
அதே சமயம் மதம் வருவதற்கு முன் நம் சமூகம் வன்முறை நிறைந்த சமூகமாகவே இருந்திருக்கிறது. யார் பலம் பொருந்தியவரோ அவரே வாழ முடியும். முழுக்க முழுக்க பொது சமூகம் செவ்வாய் ஆதிக்கத்தில் வாழ்ந்து வந்தது.
என்னதான் மன்னர்கள் சூரியன் களாக இருந்தாலும் ஒரு உயிர் வாழமுடியுமா என்பதை அதன் வீரமே முடிவு செய்துகொண்டிருந்தது.
பின் மதம் மனிதர்களுக்கு குற்ற உணர்வை போதித்தது. அதாவது ஒரு வகையில் குரு கிரகத்தின் ஆதிகத்தில் பொது சமூகம் வாழத்தொடங்கியது. அது தான் popeகள் மற்றும் மதகுருக்கள் உருவாக காரணம்.
மதம் எப்பொழுதும் ஒரு கேள்விக்குட்படுத்தப்படாத ஒரு புனிதத்தையே முன்னிறுதத்தும். அதாவது கடவுள் , புனித நூல், புனித ஊர் ,புனித சிலைகள் இன்ன பிற.. இந்த புனிதம் மனிதர்களை இரண்டாக பிரித்தது. நல்லவர்கள் தீயவர்கள் உருவானார்கள். நல்லவர்களாக இருந்தால் இந்த சமூகத்தோடு வாழலாம். கெட்டவராக இருந்தால் இந்த சமூகம் அவர்களை புறகணித்துவிடும் என்ற மனநிலை உருவாக்க்கியது.
இந்த புனிதப்படும் குணம் மெல்ல வளர்ந்து மக்கள் வன்முறையை கைவிட்டனர். அதற்காக மதம் நல்லது என்று நான் பேசவரவில்லை. மதம் எப்படி இயங்குகிறது என்பதையே கூறுகிறேன்.
மதம் முக்கியமாக செய்ததது செவ்வாய் ஆதிக்க வீரர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது தான். அதற்கு பிறகே ஓரளவிற்கு மனிதர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை கொலை என்ற எண்ணம் விடுத்து கடவுளையும் ஓரளவிற்கு சட்டத்தையும் புனிதத்தை ஏற்றுக்கொண்டார்கள். காலம் ஆக ஆக மதம் மெல்ல அரசர்களையே சூரியனையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரச்செய்தது.
இந்த புனிதப்படுத்தபட்ட சமூகத்தில் கோவத்தை வெளிடுத்த வண்முறை உணர்வை வெளிபடுத்த இடம் மிக க்குறைவாகவே உள்ளது. என்னதான் எந்த அதீத வன்முறை உணர்ச்சி இல்லாமல் மனிதர்கள் வளரும் சூழலை நாம் உருவாக்கி இருந்தாலும் பிறக்கும் அனைவரும் செவ்வாய் ஆதிகம்மே இல்லாமல் பிறப்பதெல்லாம் இல்லை.
இன்றும் மனிதர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். அதாவது மதத்திற்கு முந்தைய காலத்தில் இருந்து இன்று வரை பிறக்கும் மனிதர்கள் மாறவில்லை. அவர்கள் வாழும் சூழல் மட்டுமே மாறியிருக்கிறது.
கோவத்தை உடல் பலத்தை ஆயுதத்தை விரு்பபவர்கள் காவல் துறை மற்றும் ராணுவத்துறையில் சேர்ந்து கொள்ளலாம். இவர்கள் இயங்குவது சட்டம் என்ற புனிதத்திற்கு உட்பட்டுத்தான். அதனால் தான் அவர்களை புனித சமூகம் தனது அங்கமாக வைத்திருக்கிறது. அதாவது அவர்களுடைய செவ்வாய் குணம் சமூகத்தில் நல்லவைகளுக்காக சமூகத்தை காப்பாற்றுவதற்காகவே இருக்கிறது என்ற அளவிவேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே சட்டத்தை மீறுபவர்கள் ரௌடிகள் அடியாட்களாக ஆகிவிடுகின்றனர். இருவருமே அடக்குமுறையை வீரத்தை முன்னிறுத்துபவர்களே. ஒன்றும் வித்யாசமில்லை. இதில் சிறு பகுதியினர் செவ்வாய் உடைய சக்தியை மடைமாற்றும் நெருப்பு சார்ந்த தொழில்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவது போன்றறவற்றில் இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் இந்த வகைகளையும் தவிர்த்து செவ்வாய் ஆதிக்கம் உள்ள மனிதர்களுக்கு தங்கள் உணர்வை தீர்த்துக்கொள்ள இருக்கும் இன்னும் ஒரு முக்கிமான வடிகால் தான் சினிமா.
சினிமாவில் MASS Hero என்றால் யாரையாவது அடிக்க வேண்டும் யாரையாவது குத்த வேண்டும் சுட வேண்டும். வெட்ட வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் ஒத்துக்கொள்வோம். அதாவது மக்கள் நலனுக்காக என்ற போர்வையில் இதை செய்தால் போதும். படம் பார்த்து முடியும் பொழுது நாம் பலரை சுட்டுவிட்ட திருப்தியில் வீடு வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம்.
இப்பொழுது கலையையும் புனிதப்படுத்தும் வேலையை சிலர் செய்கின்றனர். அதீத புத்திமதி கூறுவது அங்கே போய் தேசிய கீதம் போடுவது போன்று சினிமா வன்முறையை தூண்டுகிறது என்று கூறி வடிகாலை அடைக்க முயற்சிக்கிறார்கள். அது மிகவும் ஆபத்தானது.ஒரு புனிதமான சமூகம் வாழவேண்டுமென்றால் அந்த புனிதத்திற்கு உட்படாத கலை மிகவும் அவசியம் ( இதை பற்றி விரிவாக தனியாக பேசலாம் )
நேற்று நடந்த படுகொலைகளை, தன் கோபத்தை பழி உணர்வை வெளிபடுத்த முடியாத எளிய மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வடிகாலாக ஆகிவிட்டது. அதனால் இதை வரவேற்கவே செய்வார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கோபம் வந்தால் தன் குழந்தையையே அடிக்க தயங்காதவர்கள்.
மேலும் இவர்களுக்கும் காவல் துறைக்கும் செவ்வாய் ஆதிக்கம் பொதுவாக இருப்பதால் காவல் துறை அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்ததும் எந்த கேள்வியும் இன்றி அதை ஏற்றுக்கொண்டனர்.உண்மையில் பல encounter கள் அரசு அதிகார நலன் கருதி அப்பாவிகளை கொன்றிருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள மறுகிறார்கள்.
ஏனென்றால் கொலை மற்றும் பழிவாங்குதல் என்ற தங்கள் மனதின் நீண்ட நாளைய அழுத்ததில் இருந்து விடுவித்துகொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி நழுவவிட முடியும். காமத்திற்கு ஏங்குபவனுக்கு முன் ஒருத்தி தனது சேலையை நழுவவிட்டால் அதை பார்த்துவிட நினைப்பான?இல்லை புனித நியாயத்தை யோசித்து கண்கள் மூடுவானா? அல்லது கண்களை மூடினாலும் பார்த்ததையே நினைத்து மனதிற்குள் மகிழாமல் இருப்பானா?
நான் யாரையும் தப்பாவனவர்களாக சித்தரிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஒரு பிரச்சனையை புரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
இங்கே அரசு அதிகாரம் ( சூரியன் ) புனிதமாக உள்ளது.
அன்பு (சந்திரன் ) புனிமாக உள்ளது
அமைதி நல்லிணக்கம் (ராகு ) புனிதமாக உள்ளது
ஒழுக்கம் (குரு ) புனிதமா உள்ளது
கடின உழைப்பு அடிபணிதல் (சனி) புனிதமாக உள்ளது
அறிவு ( புதன் ) புனிதமாக உள்ளது
ஞானம் ( கேது ) புனிதமாக உள்ளது
ஆனால் வன்முறையும் ( செவ்வாய் ) காமமும் (சுக்கிரன் ) மட்டும் மிகவும் கட்டுப்பாட்டில் உள்ளது.வன்முறை நிறைந்த விளையாட்டுளையோ ( வேறு வடிகாலையோ ) விபச்சராத்தையையோ நாம் அனுமதிகவில்லை. அந்த உணர்வு தான் ஒரு புறம் கற்பழிப்பை தூண்டுகிறது. மறுபுறம் கொலையை ஆதரிக்கவும் தூண்டுகிறது.
நாம் எல்லா வகையான மனிதர்களோடும் வாழ்கிறோம். நாம் யாரும் வன்முறையாளனகாவோ கற்பழிப்பவனாகவோ பிறக்கவில்லை. ஆனால் நம் உணர்வுகளுக்கான வடிகால் இல்லாத பொழுது அழுத்தம் ஏற்படும். அந்த நீண்ட நாளை அழுத்தம் வாய்ப்பு கிடைக்கும் பொழுது மீண்டும் மீண்டும் கற்பழிப்பும் பழிவாங்கமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்
மற்றபடி சுட்டுவிட்டால் பயம் வரும் நடக்காது என்பெதல்லாம் முட்டாள்தனம். இந்தியாவில் அவன் அவன் வீட்டிலேயே தன் மனைவியை அவள் விருப்பம் இன்றி வன்புணர்வு செய்பவர்கள் மிக அதிகம். எல்லாரையும் சுட்டுவிடலாமா?
உண்மையான தீர்வை நோக்கி நகராமல் ஒவ்வொருவரையும் சுடத்தொடங்கினால் சீக்கிரேமே வன்முறை நிறைந்த சமூகமாகவே மாறுவோம். அதை தடுக்கவே முடியாது
***
நன்றி
திரு லஷ்மண் #thirulakshman #Thiru
Dec 7 2019
பி.கு :
1. சென்ற ஆண்டு ஆந்திராவில் நடந்த ஒரு கூட்டு வன்புணர்வும் அதை தொடர்ந்து நடந்த படுகொலையை குறித்தும் அதை எந்த கேள்வியும் இல்லாமல் மக்கள் ஆதரித்தது ஏன் என்பதை பற்றி எழுதிய கட்டுரை. இதில் இன்று சில மாற்றங்களை சேர்க்க வேண்டியுள்ளது. இருந்தாலும் அதை அப்படியே தருகிறேன்.
2. இதை படித்து ஒரு சிலர் , உன் குடும்பத்தில் இது போன்ற ஒரு விஷயம் நடந்தால் நிதானமாக இருப்பாயா என்று கேட்டிருந்தனர். நான் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக கொலை செய்ய தயங்கமாட்டேன். தனிப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்தாலும் அது சரியே. ஆனால் ஒரு படுகொலையை அரசாங்கம் செய்யக்கூடாது என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இருக்கிறது.
No comments:
Post a Comment
நன்றி....