Saturday, October 24, 2020

அப்பா

அப்பா...

சென்ற மாதம் இதே தேதியில் மதியம் மூன்று மணி அளவில் என் தந்தையின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது...

நம் கண் எதிரில் உயிர் பிரியும் போது நாம் எவ்வளவு கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்பது புரிகிறது...

 உடலுக்கு மட்டுமே மரணம்.. உயிருக்கு அல்ல. என் தந்தையின் உடல்தான் மரணமடைந்தது. என் தந்தையின் உயிர் மரணமடையவில்லை...

மிகவும் லேசாக எல்லாவிதப்பற்றுகளையும் விட்டு மரணத்தை விரும்பி என் தந்தை ஏற்றுக்கொண்டார்.

சிறுவயதிலிருந்து எனக்கும் என் தந்தைக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. அப்படிப்பட்ட இடைவெளி இருந்தும் அவருடைய இருப்பின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை..

உயிர் பிரியும் நேரத்தை இறைவன் எவ்வளவு புத்திசாலித்தனமாக தன் கையில் வைத்திருக்கிறான்..
அதற்குள் எத்தனை தர்க்கங்கள்..விவாதங்கள்..முடிவுகள்...அபிப்பிராயங்கள்..எண்ணங்கள்.. உணர்வுகள்.. உணர்ச்சிகள்....


 


No comments:

Post a Comment

நன்றி....