Monday, December 7, 2020

திரு. லக்ஷ்மண்

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் - திருவள்ளுவர்

தவம் செய்யும் ஒருவன் சினத்தை கொள்ளாமல் இருந்தால் அவன் உள்ளியது எல்லாம் அடைவான் - தேவநேயப்பாவாணர் உரை

****
கோபமும் கோபம் சார்ந்தவைகளும்…

*****
கோபம் எல்லாருக்கும் தானே வருகிறது? அதில் தவறென்ன உள்ளது?

கோபம் என்பது ஒரே காரணியினால் வருவதில்லை. அதனால் தான் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தில் கோபம் வருகிறது. 

எ.கா : 

ஒருவருக்கு பெண்கள் ஆடையை புதுமையாக அணிந்தால் வருகிறது.
புதுமையாக ஆடை அணியும் பெண்ணிற்கு ஒருவர் பொய் சொன்னால் கோபம் வருகிறது

பொய் சொல்வது இயல்பான விஷயம் என்று கருதுபவருக்கு ஒருவர் குறை சொன்னால் கோபம் வருகிறது.குறை சொல்வதை இயல்பாக நினைக்கும் ஒருவருக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தரவில்லை என்று கோபம் வருகிறது.

ஊதியம் கொஞ்சமாக வந்தாலும் போதும். எளிமையாக வாழ்வோம் என்று நினைக்கும் ஒருவருக்கு பெண் ஆடையை புதுமையாக அணிந்தால் கோபம் வருகிறது.

****

இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இந்த சுழற்சியை முழுவதும் உணர்ந்தால் போதும். கோபம் என்பது தாழ்ந்த உணர்ச்சி என்பது விளங்கும்.

நம் மனதிற்கு ஏற்பதை பார்க்கும் பொழுது ஆற்றல் கொஞ்சம் உயர்கிறது. நம் மனதிற்கு ஏற்பில்லாதவற்றை பார்க்கும் பொழுது ஆற்றல் குறைகிறது.

கோவம் என்பது ஆற்றல் குறைந்த நிலை. 

மனதிற்கு ஒவ்வாத விஷயத்தை பார்த்ததும் ஆற்றல் குறைவதால்  மனம் ஆற்றல் குறைந்ததும்  கோபத்தை எடுத்துக்கொள்கிறது. 

கோபம் கொள்வதால் ஆற்றல் இழக்கிறோம். தொடர்ந்து கோபத்தை வளர்த்தால் ஆற்றல் கொஞ்சம் கூட மிஞ்சாது.

கால் தவறி விழுகிறோம். உடனே எழுவதற்கு பதில் மேலும் மேலும் விழுந்துகொண்டே இருக்கிறோம்.

மனதை கவனித்தால் கோபம் வரும் புள்ளியை கண்டடைந்துவிடலாம்.
மற்றபடி கோபத்தில் நல்லவைகள் இல்லை.

2. தவறானவர்கள் மேல் கோபப்படுவதில் என்ன தப்பு இருக்கிறது?

ஒருவர் நம்மை கோபப்டுத்தும் பொழுது அவர் நமக்கு தப்பானவராக தோன்றலாம். அவர் தப்பானவர் என்று முடிவுக்கு வரும்பொழுது மேலும் கோபம் அதிகரிக்கும். நாம் அவருக்கு செய்த நண்மை நினைவுக்கு வர மேலும் மேலும் கோபம் அதிகரிக்கும். நாம் நல்லவராகி விடுவோம்.  சக மனிதனை தப்பாக நினைக்கும் பொழுதே நாம் ஆற்றலை இழக்கத்துவங்கி விடுகிறோம். அதை தடுக்கவே முடியாது.

அதற்கு பதிலாக

1. ஒருமுறை தவறாக நடந்துகொண்டால் ,

அவர் தப்பானவர் இல்லை. அவருக்கும் நமக்கும் மனதளவில் வேற்றுமை உள்ளது. அதனால் அவருடைய இயல்பும் நம் இயல்பும் வேறு வேறாக உள்ளது. அதை நாம் தவறாக எதிர்தன்மையோடு அணுகுகிறோம். அவருக்குள்ளும் உயிர் தான் இருக்கிறது. உண்மை தான் உயிராக ஒளிர்கிறது. அவரது குணங்களில் உங்களுக்கு ஒற்றுப்போகும் குணங்களை எடுத்துக்கொண்டால் அவர் நண்பராக தெரிவார். அவர் முரண்படும் இடங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

2. உங்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறார் என்றால்... 

அவர் தப்பானவர் இல்லை. ஆனால் திரும்ப திரும்ப நம்மிடம் தப்பு செய்ய அவர் தூண்டப்படுகிறார் என்று புரிந்து கொண்டால் கோபம் குறையும். 

அவர் ஏன் நம்மிடம் மீண்டும் மீண்டும் நாம் விரும்பாத வண்ணம் நடந்துகொள்கிறார் என்ற கேள்வியை கேட்டு விடையைத்தேடிச்சென்றால் அவருக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை நாம் அவரை செய்ய சொல்லியிருப்போம். அல்லது அவருக்கு பிடிக்காத ஒன்றை அவர் சுமந்த கொண்டிருப்பார். அந்த சுமைதந்த அழுத்ததில் நமக்கு பிடிக்காத வாறு நடந்து கொள்ளலாம்.

ஒன்று நம்மை காயப்படுத்திய புள்ளியில் அவரோடு பழகுவதை தவி்க்கலாம் அல்லது மீண்டும் அவரை நம்புவதை தவிர்கலாம் அல்லது அவரை விட்டு மொத்தமாக விலகி நிற்கலாம். 

ஆனால் மனதளவிலும் அவர் மேல் கோபம் மட்டும் இருக்கவே கூடாது. முடிந்தவரை அழித்துவிடுங்கள். பழைய கோபங்களை எல்லாம் அவருக்கு ஏதோ நியாயம் இருக்கும் என்று அதன் மேல் ஒரு ஈரத்தை அன்பை பரவவிடுங்கள். நிரந்தரமான கோபம் அவரைமட்டுமல்ல நம்மையும் காயப்படுத்திக்கொண்டே இருக்கும்.

கோபத்தை கையாள்வதில் சிக்கல் அதிகம் உள்ளவர்கள் யார்?

சமைக்கப்பிடித்தவர்கள்
வண்டியோட்ட பிடித்தவர்கள்
காவல் துறை ராணுவம் போன்ற பாதுகாப்பு துறைகளில் உள்ளவர்கள்
நெருப்பு சம்மந்தபட்ட ஆயுதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் கொண்டவர்கள்
செல்போனை அல்லது வீட்டுப்பொருட்களை அதிகம் கைதவறி விடுபவர்கள்

இவர்கள் அனைவருக்குமே பெரும்பாலும் தைரியம் அதிகம் இருக்கும். அது கோபத்தின் ஆற்றல் நிறைந்த நிலை. அந்த தைரியத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அது கீழிறங்கி கோபமாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீரம் இருவரையும் பாதுகாக்கும். உயர்ந்த ஆற்றல்
கோபம் இருவரையும் அழிக்கும். தாழ்ந்த ஆற்றல்.

எப்படி வழிகாட்டியாக இருக்கும் ஒருவர் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமோ அதே போல வீரம் உள்ளஒருவர் எக்காரணம் கொண்டும் கோபம் உள்ளவராக மாறக்கூடாது. அது தான் அவரின் யோகமாக இருக்க வேண்டும்.

“Anger should be expressed. - Any anger that is not coming out, flowing freely, will turn into sadism, power drive, stammering, and other means of torturing.” - Bruce lee

கோபம் வந்துவிட்டால் காட்டிவிடவேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் புரூஸ்லி கூறியுள்ளார். அதுவும் சரி தான். 

கோபம் வந்துவிட்டால் காட்ட வேண்டாம். அதே சமயம் அடக்கவும் வேண்டாம்.

கோபத்தை  வருவதையே உருவாவதையே தடுக்க வேண்டும். வந்துவிட்டால் அதை வளர்க்ககூடாது. அப்பொழுதே அந்த உண்ர்வை அழித்துவிடவேண்டும்.  அது தான் ஆற்றலை பாதுகாக்கும். மனதில் சுமந்துகொண்டிருந்தால் bruceelee கூறுவது போல் தான் நடக்கும். 

அடக்குவது வேறு உருவாகாமல் மனதை கவனித்து தடுப்பது வேறு. உருவாகிய பிறகு மனதில் அதை எடுத்துக்கொள்ளாமல் அழிப்பது வேறு.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் - திருவள்ளுவர்

( யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும். )

மேலும் நம் வயதில் சிறியவரிடம் கோபம் படும் பொழுது அவர்கள் நம்மை மீண்டும் தாக்க முற்படும் பொழுது நாம் அவர்களை விட மிகவும் குறைந்த அனுபவம் மிக்கவராக தாழ்ந்தவராகிவிடுவோம்.  தன் குழந்தையாக இருந்தாலும் வயதில் குறைந்தவரிடம் கோபம் கொண்டால் என்றைக்குமே நிம்மதி கிடைக்காது. வலி வேதனை மட்டுமே மிஞ்சும்.

மேலும் கோபத்தை பற்றி பேசுவோம்.

நன்றி
திரு லஷ்மண் #thirulakshman

No comments:

Post a Comment

நன்றி....