எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? நம்மிடம் எதிர்மறையாக நடந்து கொள்பவர்களிடம் நேர்மறையாக நடந்துகொள்வது சாத்தியமா ?
மனதை கடப்பது எப்படி? கடவுள் தன்மை என்றால் என்ன?
*****
வாழ்க்கை பற்றி எனக்கு ஏற்பட்ட பல தரிசனங்களில் மிக மிக முக்கியமானது இது. இந்த தரிசனம் என்னுடைய தனிசொத்து அல்ல.
இவை என்னுடன் எண்ணத்தாலும் வாக்காலும் செயலாலும் முரண்பட்ட முரண்படும் ஒவ்வொருவரின் பெரும் கருணையினால் நான் கண்டடைந்தவைகள். அதனால் என்னிடம் முரண்பாடுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த தரிசனத்தில் பங்குண்டு.
நான் எழுதியிருப்பதை முழுவதும் உங்கள் மனம் உள்வாங்க முடிந்தால் உங்கள் வாழ்க்கையின் பல அடிப்படை பிரச்சனைகளில் இருந்து வலிகளில் இருந்து நிரந்தர விடுதலையை தரும் சாத்தியம் உள்ளது என்று ஆழமாக நம்புகிறேன். அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இறுதி வரை படியுங்கள்.
******
எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பது சாத்தியமா ?
சமீபத்தில் என்னுடைய ஜோதிடம் மற்றும் மனநலம் சம்மந்தமான ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக , ஒரே செயலுக்கு நேர் மறை எதிர் மறை என்ற இரண்டு தன்மைகள் உள்ளது என்பதை கண்டடைந்தேன்.
வழி காட்டுதல் / குறை கூறுதல்
தலைமைப் பொறுப்பு / அதிகாரம்
தீர்வை நோக்குதல் / பிரச்சனையை நோக்குதல்
விருப்பு / வெறுப்பு
இப்படி இன்னும் ஆழ ஆழ சென்றால் ஒவ்வொரு செயலிலும் நேர் மறை தன்மை எதிர் மறை தன்மையை என்று இரண்டு உண்டு என்பது புலப்படும்.�� இதில் முக்கியமான விஷயம் , இவை எதிர் தன்மையா இருந்தாலும் ஒன்றுக்கொண்டு நெருக்கமான தொடர்பு கொண்டது.
வழி காட்டுதல் / குறை கூறுதல் என்பதை எடுத்துக்கொள்வோம்.
நாம் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது வழிகாட்டுவோம்.
நம் மனநிலை அவ்வளவு பலமாக இல்லாத பொழுது அதே வழிகாட்டுதலை குறையாக கூறுவோம்.
வழிகாட்டுதல் இருவருக்கும் மகிழ்ச்சியைத்தரும். குறை கூறுதல் இருவருக்கும் மகிழ்ச்சி இன்மையை எதிர்மனநிலையைத்தரும்.
எடுத்துக்காட்டாக ஒரு நாள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அப்பொழுது ஒருவரை சந்தித்தால் அவரைபற்றிய மகிழ்வான விஷயத்தை மனம் எடுத்துக்கொள்ளும்.
அதே வேறொரு நாளில் மிகவும் அயர்ச்சியில் ஆற்றல் குறைபாட்டில் இருந்தால் அதே நபரை சந்தித்ததும் அவரைபற்றிய அயர்வான எதிர்மறையான விஷயத்தை மனம் எடுத்துக்கொள்ளும்.
அதனால் ஒருவரை பற்றி நல்லதும் கெட்டதும் நம் உயிரின் ஆற்றல் மூலமே முடிவு செய்யப்படுகின்றது. அதனால் ஆற்றலை பெருக்கினால் எல்லா நேரத்திலும் நிதானம் இழக்காமல் நேர்மறை சிந்தனையோடே வாழ முடியும்.
இது ஏதோ motivation க்காக பேசுகிறேன் என்று நினைக்கவேண்டும். நான் உண்மையை மட்டுமே பேசுவேன். ( motivation தவறல்ல. ஆனால் நான் அதை செய்யவில்லை)
அந்த ஆற்றலின் பெயர் என்ன?
அந்த ஆற்றலை தான் இறைபேறாற்றல் என்று கூறுகிறோம்.
நாம் நேர் மறை செயல் செய்யும் பொழுது அந்த ஆற்றல் நமக்கு கூடும். இறை ஆற்றல் அதிகம் ஆகும் பொழுது நேர்மறை செயல் தொடர்ந்து செய்யத்தூண்டப்படுவோம். அது நமக்கும் பிறருக்கும் ஒன்றுபோல மகிழ்ச்சியைத் தரும்.
அதுவே ஆற்றல் குறைய தொடங்கினால் யார் மீதோ அல்லது எல்லார் மீதும் ஒரு வெறுப்புணர்வு உண்டாக்கும். நாம் சாத்தானாக மாறுவோம்.அது எதிர்மறை செயல் செய்யத்தூண்டும். அது நமக்கும் பிறருக்கும் கஷ்டத்தைத்தரும்.
ஏன் ஆற்றல் குறைந்து சாத்தான் ஆகிறோம்?
எதிர்மறை எண்ணங்களோ செயல்களோ நம் ஆற்றலைக் குறைக்கிறது.
ஆற்றல் குறையும் பொழுது எதிர்மறை எண்ணங்களையோ செயல்களையோ மேலும் மேலும் செய்யத்தூண்டுகிறது. இது ஒரு சுழற்சி. இது தான் சாத்தானின் தன்மை. இந்த சுழற்சியை உடைத்தால் தான் ஆற்றல் பெருகும்.��
எப்படி ஆற்றலை பெருக்கிக்கொள்வது?
ஞான மார்கத்தில் நம் உடலை சரி செய்வது. நம் சுவாஸத்தை சரி செய்வது. நம் எண்ணங்களை சரி செய்வது. நம் மனதை ஆள்வது.நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை அடைவது. இது ஒரு வழி.
இதையே உலகியல் இருப்பவர்களுக்கு கர்மயோகம். அதாவது செயல்.
உங்களை மகிழ்விக்கும் காரியங்களில் ஈடுபடுவது.
பிறரை மகிழ்விக்கும் காரியங்களில் ஈடுபடுவது.
மன்னிப்பது மன்னித்து ஏற்றுக்கொள்வது
ஒருவரின் வலியை போக்குவது.
மனம் இறங்குவது.
உங்களுக்கு பிடித்தவரைகள் சந்திப்பது.
எதெல்லாம் உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறதோ அது ஆற்றலை கூட்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் பொழுது தானாக பிறரை மன்னிக்க தோன்றும் இல்லையா நமக்கு தீங்கு செய்தவருக்கும் நல்ல செயல் செய்யத்தூண்டும் இல்லையா அது தான் கடவுள் தன்மை.
நான் நல்ல செயலை செய்தாலும் பிறர் எதிர்மறை செயலை செய்கிறார்களே. அது ஏன்?�
நீங்கள் அந்த நொடியில் ஆற்றல் அதிகமாக வைத்திருப்பதால் நல்ல செயல் செய்கிறீர்கள்.அவர்கள் ஆற்றல் குறைவில் இருக்கிறார்கள் அதனால் எதிர்மறை செயல் செய்கிறார்கள்.�
நீங்கள் நல்லது செய்தும் உங்களை தொந்தரவு செய்ய நினைக்கிறார் என்றால் நீங்கள் யோசிக்க வேண்டியது அவர் ஆற்றல் குறைவில் இருக்கிறார் என்பது மட்டுமே. அவர்கள் உங்களுக்கு காயம் ஏற்படுத்தியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா?
மனைவியை / கணவனை இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.��
இருவரும் நல்ல மனநிலை :��
நீங்கள் நல்ல மனநிலையோடு உங்கள் மனைவியிடம் பேசுகிறீர்கள். அவர்களும் நல்ல மனநிலையோடு உங்களிடம் பேசினால்.அந்த இடம் கடவுள் தன்மை அதிகம் ஆகும். அன்பு அதிகம். இருவரை பற்றி நல்ல நினைவுகள் உருவாகும். அது இன்னும் பல நல்ல நினைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.
இதுவே தான் அம்மா அப்பா குழந்தைகள் உறவுகள் நண்பர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும்.��
ஒருவர் நல்ல மனநிலை இன்னொருவர் எதிர் மனநிலை :
நீங்கள் நேர்மறை செயலை செய்தாலும் உடன் இருப்பவர் ( எ.கா உங்கள் மனைவி ) எதிர்மறை செயலை செய்யும் பொழுது நீங்களும் எதிர்மறை செயலை செய்ய தூண்டப்படுவீர்கள். ��அப்படி தூண்டப்படுவதை ஏற்று எதிர்மறை செயலை நீங்கள் செய்யதால் இன்னொருவரை மேலும் எதிர்மறை செயலை செய்ய வைப்பீர்கள்.
இந்த தொடர்ச்சி உங்களுக்குள் இருக்கும் இறை ஆற்றலை மொத்தமாக அழித்துவிடும். இருவரும் சாத்தானின் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இது அன்றோடு முடியாது.
இருவரைப்பற்றிய மிக மோசமான நினைவுகள் இருவருக்குள்ளும் உருவாக்கும். அது அடுத்த கட்ட பிரச்சனைகளுக்கு விதையாக மாறும்.
இங்கே என்ன நடந்தது?
நீங்கள் முதலில் நேர்மறை செயல் செய்த பொழுது கடவுள் தன்மை இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது எதிர்மறை செயல் வந்ததும் அந்த கடவுள் தன்மை இழந்து சாத்தானின் தன்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறீர்கள்.இது தான் மனம் போன போக்கில் செல்வது.
உங்களிடம் ஆற்றல் இருந்திருக்கிறது. ஆனால் அதிகம் இல்லை. அதனால் அந்த ஆற்றலை இன்னொருவரின் எதிர் செயல் மொத்தமாக அழித்துவிட்டது. அதனால் அவரை பற்றியோ அவருடைய எதிர்மறை செயல்களை பற்றியோ எந்த அக்கறையும் கொள்வதில் அர்த்தம் எதுவும் இல்லை.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுடைய ஆற்றல் குறைந்த வாக இருந்ததால் சீக்கிரம் தீர்ந்துவிட்டது. அதை பெருக்கிக்கொள்வது தான் நிரந்த விடுதலை..
எதிர்மறை செயல்கள் எவ்வளவு வந்தாலும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டுமானால் அபரிவிதமான ஆற்றல் வேண்டும். பிறரை காரணம் காட்டுவது உண்மையான தீர்வு ஆகாது.
இதை புரிந்துகொண்டால் மீண்டும் அதை செய்ய மாட்டீர்கள். மனதை கடந்துவிட முடியும்.இதை தான்
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று கணியன் பூங்குன்றனார் கூறினார்.�
என்னை தொந்தரவு செய்பவரிடம் எதிர்மறை செயல் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?
நான் மேலே சொன்னது போல் , உங்களை ஒருவர் தொந்தரவு செய்கிறார், உங்களை எதிர்மறை செயலை ஒருவர் செய்யத்தூண்டுகிறார் என்றால் அவரைப்போலவே நீங்களும் ஆற்றல் குறைபாட்டில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உடனடியாக அவரிடம் இருந்து விலகிச்சென்று உங்கள் ஆற்றலை பெருக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ( எப்படி ஆற்றலை பெருக்குவது ? என்று மேலே விடை கூறியிருக்கிறேன் ).
பிரச்சனை துவங்கும் முன்பே அங்கிருந்து விலகிவிட்டால் அவர்களிடம் உங்களை பற்றிய தவறான எண்ணம் இல்லாமலோ அல்லது குறைவான பாதிப்புடனோ நீங்கள் தப்பித்துவிடலாம். அவரையும் தப்பித்துவிடலாம். இது பல எதிர்கால பிரச்சனைகளில் இருந்து இருவரையும் காத்துவிடும்.
முக்கியமான விஷயம்.. உங்கள் பக்கம் ஆயிரம் நியாயம் இருந்தாலும் ஒரு எதிர்மறை செயலை நீங்கள் செய்தால் இன்னொருவரை கஷ்டபடுத்தினால் அது உங்கள் ஆற்றல் குறைபாட்டையே காட்டும். அப்பொழுதும் நீங்கள் ஆற்றலை பெருக்கத்தான் வேண்டும். அவர்களை பற்றி விமர்சிக்ககூடாது.
சரி. அந்த சூழலில் இருந்து அவரிடம் இருந்து விலக முடியவில்லை என்றால் என்ன செய்வது?
அவருடைய நல்ல விஷயங்களை பற்றி பேசுங்கள். அவரை புகழுங்கள். அவருடைய எல்லா நல்லவைகளையும் நினைவுபடுத்துங்கள். அவருக்கு எப்படியாவது ஆற்றல் தரப்பாருங்கள். அவர் தன் எதிர்மறை செயல்பாட்டை உடனே நிறுத்திவிடுவார்.
இதை அந்த உயிரும் உங்களைப்போன்ற உயிர் இந்த நிமிடம் அந்த உயிர் கொஞ்சம் ஆற்றல் குறைபாடோடு உள்ளது என்று நினைத்துச்செய்ய வேண்டுமே ஒழிய அதை வைத்து அந்த உயிரை எடை போடக்கூடாது. நீங்கள் ஏதோ அவரை மன்னிபவராக நினைத்துக்கொள்ளவோ கூடாது. மிகுந்த சமநோக்கோடு அதை செய்யவேண்டும்.
அந்த முழுமையான நேர்மறை செயல் , அவருக்கு ஆற்றலை பெருக்கும். ஆற்றல் பெருகியதும் அவர் இப்பொழுது மகிழ்ச்சியில் திளைப்பார். அவர் உங்களுக்கு ஆற்றல் தருவார். உங்களை மகிழ்விக்க நினைப்பார். புகழ்வார். உங்களை கொண்டாடுவார். எல்லாம் சரியாகும். ஒரு துளி காயம் கூட இல்லாமல் நீங்கள் இருவரும் தொடர்ந்து பயணிக்க முடியும்.
இந்த மேஜிக்கை ஒரே ஒரு முறை அனுபவித்துவிட்டால் வாழ்க்கையில் மீண்டும் யாரிடமும் தொடர் வாதம் செய்யவே மாட்டீர்கள். கலந்துரையாட மட்டுமே முடியும். யாரையும் தவறாக நினைக்கத்தோன்றாது. யாரும் உங்களை கஷ்டப்படுத்த முடியாது.இன்னொரு உயிரின் ஆற்றலை அதிகரிக்க உதவும் பொழுது நீங்கள் இயல்பாகவே கடவுள் தன்மையை அடைகிறீர்கள்.
எப்பொழுது நாம் முழுமையான கடவுள் தன்மையை அடைவது?
இன்னொருவர் எதிர் மறையாக என்ன செய்தாலும் அப்பொழுதும் நீங்கள் நிதானம் இழக்காமல் இருந்து நேர்மறை செயலை மட்டுமே மீண்டும் அவருக்கு தந்தால் , நீங்கள் ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கடவுள் தன்மையில் முழுமையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.( ஆற்றலை பெருக்கும் வழிகளை பற்றி இன்னும் விரிவாக விரைவில் எழுதுகிறேன். )
இந்த நிலையை அடைவது தான் ஞானம் அடைவது. இதை அடைவது தான் வீடுபேறின் முதல் நிலை. இது உங்களை நிரந்தரமான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
உங்கள் மீது எப்பொழுதும் ஒரு நேர்மறை எண்ண அலைகள் பரவியிருக்கும். பிறரையும் உங்களிடம் நெருங்கச் செய்யும். அனைவருக்கும் உங்கள் இருப்பு ஒரு பாதுகாப்புணர்வை ஏற்படுத்தும்.��இது தான் மனதை கடந்து வாழ்வது. இது தான் காலத்தை கடந்து வாழ்வது.
நாம் அனைவரும் காலத்தை கடந்து வாழ முடியும். ஆம். உண்மையாக கூறுகிறேன் நாம் அனைவருமே கடவுள் தன்மையை முழுவதுமாக அடைய முடியும். நமக்குள் இருக்கும் உயிர் தான் சாட்சி. உயிர் இருக்கும் எந்த ஜீவனும் கடவுள் தன்மையை அடைய முடியும்.
நன்றி
திரு #thiru #thirulakshman
No comments:
Post a Comment
நன்றி....