நம் நிரந்தரமான மகிழ்ச்சியை உருவாக்கும் காரணிகள் என்ன என்ன?கெடுக்கும் காரணிகள் என்ன? ஆற்றலில் நிறை எது குறை எது? நிரந்தரமான மகிழ்ச்சியை எப்படி மீட்டுக்கொள்வது.
***
ஆற்றல் குறைபாடு பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அது பெருமாபாலனவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து வரும் அழைப்புகளும் கலந்தாய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியே இந்த பதிவு.
புதிதாக படிப்பவர்களுக்கும் ஏற்கனவே படித்தவர்களும் முன் சுருக்கத்தை முதலில் தருகிறேன். பின்னர் புதிய விஷயத்தைத்தருகிறேன். ( கீழே commentல் அதன் முழு பதிவின் சுட்டியைத்தருகிறேன் )
RECAP :
ஒவ்வொரு ஆற்றலிலும் நேர்மறை தன்மை எதிர்மறை தன்மை என்ற இரண்டு உண்டு.
வழிகாட்டுதல் vs குறை சொல்லுதல்.
இரண்டுமே குருவினுடைய ஆற்றல் தான். முதலாவது இருவருக்கும் மகிழ்ச்சியைத்தரும். இரண்டாவது இருவருக்கும் வருத்தத்தை தரும்.
நாம் ஆற்றல் நிறைவாக இருக்கும் பொழுது நேர்மறை தன்மையை எடுத்துக்கொள்கிறோம். நமக்கு ஆற்றல் குறைபாடு ஏற்படும் பொழுது எதிர்மறை தன்மையை எடுத்துக்கொள்கிறோம்.
அதாவது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது வழிகாட்டுகிறீர்கள்
நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாத பொழுது குறைசொல்ல முற்படுகிறீர்கள்
இங்கே மகிழ்ச்சி என்பதை ஆற்றல் நிறையாக எடுத்துக்கொள்கிறோம். நம் புரிதலுக்காக. ( இதவும் மாறும். அது பின்னாளில் கூறுகிறேன் )
இதன் மூலம் நமக்கு ஆற்றல் நிறைவாக இருந்தால் ஒருவரிடம் இருக்கும் நேர்மறைத்தன்மையை நோக்கி பேசுகிறோம். ஆற்றல் குறைபாடு இருந்தால் எதிர்மறைத்தன்மையை நோக்கி பேசுகிறோம்.
இதில் இருந்து 4 நிலைகளை பார்ப்போம்.
1. உங்களிடம் இருந்து துவங்கும் நேர்மறைத்தன்மை எதிரில் இருப்பவரிடம் நேர்மறைத்தன்மையை உருவாக்கினால் , இருவரும் ஆற்றல் நிறைந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அங்கே மகிழ்ச்சி பொங்கும்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டுவது.
2.உங்களிடம் இருந்து துவங்கும் நேர்மறைத்தன்மை எதிரில் இருப்பவரிடம் எதிர்மறைதன்மையை தோற்றுவித்தால் நீங்கள் இப்பொழுது ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள். அவரிடம் இப்பொழுது ஆற்றல் குறை உள்ளது.
நீங்கள் வழிகாட்டுகிறீர்கள். ஆனால் அவர் குறை சொல்வதாக பார்க்கிறார். பிரச்சனையில் தொடங்கும்.
3. உங்களிடம் இருந்து துவங்கும் எதிர்மறைதன்மை எதிரில் இருப்பவரிடம் நேர்மறைத்தன்மையை தோற்றுவித்தால் நீங்கள் இப்பொழுது ஆற்றல் குறைந்தவராக இருக்கிறீர்கள். அவர் இப்பொழுது ஆற்றல் நிறைந்தவராக இருக்கிறார்.
நீங்கள் குறை சொல்கிறீர்கள். ஆனால் அவர் அதை வழிகாட்டுவதாக எடுத்துக்கொள்கிறார்.
4. உங்களிடம் இருந்து துவங்கும் எதிர்மறைதன்மை எதிரில் இருப்பவரிடம் எதிர்மறைத்தன்மையை தோற்றுவித்தால் இருவரும் ஆற்றல் குறைபாடோடு இருக்கிறீர்கள்.
நீங்களுயும் குறை சொல்கிறீர்கள். அவரும் எரிச்சல் அடைந்து எதிர்வினை ஆற்றுவார். பிரச்சனையில் சென்று முடியும்.
இதில் 2வாது நிலையில் நீங்கள் தொடங்கும் பொழுது நல்லவிதமாக தொடங்கி அவர் எதிர்மறையாக பேசி பின்னும் நீங்கள் நிதானமாக இருந்தால் உங்களுக்கு ஆற்றல் மிக மிக அதிகம். நீங்கள் கடவுள் தன்மையில் இருக்கிறீர்கள். ஆனால் அதுவே உடனடியாக நீங்களும் எதிர்மறைக்கு வந்து விட்டால் முன்பு உங்களிடம் இருந்தது பாவனை மட்டுமே. அல்லது குறைந்த ஆற்றல்.
ஆற்றல் எவ்வளவு நிறைகிறதோ அவ்வளவு தூரம் நீங்கள் இறைத்தன்மையில் இருக்கிறீர்கள்.ஆற்றல் எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு தூரம் நீங்கள் சாத்தனின் தன்மையில் இருக்கிறீர்கள்.
இந்த ஒட்டுமொத்த கோட்பாட்டில் நீங்கள் உணரவேண்டியது சுருக்கமாக 'தீதும் நன்றும் பிறர் தரவரா'
இந்த தெளிவு வரும் பொழுது ஒருவர் நம்மை குறை சொன்னாலும் அவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வாய்க்கும். மேலும் அவர் அந்த நிமிடம் ஆற்றல் குறைவாக இருந்தார். அதனால் தவறாக நடந்துகொண்டார். அதை பெரிது படுத்தி நமக்குள் எதிர்மறை நினைவை உருவாக்கிவிடக்கூடாது என்ற உணர்வு இருக்கும். அது நம்மை எப்பொழுதும் ஆற்றல் குறைவில்லாமல் பாதுகாக்கும்.
முக்கிய குறிப்பு : இந்த நிகழ்வில் உங்கள் பக்கம் நியாயம் எதிராளி நியாயம் என்றெல்லாம் பிரித்துப்பார்க்கவேண்டியதில்லை. யாரையும் மன்னிப்பதாகவும் நினைக்ககூடாது. புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
****
உங்களுடைய ஆற்றலில் குறை எது நிறை எது?
1. தலைமைப்பண்பு மிக்கவரா..
ஆற்றல் நிறை - பொறுப்புணர்வு. எடுத்த காரியத்தை முடிக்கும் தன்மை.
ஆற்றல் குறை - அதிகாரம். Manipulation மூலம் காரியத்தை சாதிப்பது
2. உணர்வுப்பூர்வமான மனிதரா..
ஆற்றல் நிறை - புதிதாக பழகுபவரிடம் தனக்கு பிடித்தைவை இருந்தால் மிக வேகமாக நெருங்குவது.
ஆற்றல் குறை - ஏற்கனவே பழகுபவரிடம் ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் கூட மிக வேகமாக விலக நினைப்பது.
3. தைரியமான மனிதரா..
ஆற்றல் நிறை - பாதுகாப்பு உணர்வு. உயிரை காக்கும் தன்மை. காப்பாற்றுவது
ஆற்றல் குறை - அடிப்பது, பழிவாங்குவது, கொலை செய்யும் வரை தோன்றுவது.
4. உணவு பிரியரா...
ஆற்றல் நிறை - புதிய விஷயங்களை கண்டடைவது. புதிய பாதைகளை. Upgrading. தனித்தன்மையை விரும்புவது.
ஆற்றல் குறை - அகங்காரம். தனக்கு மட்டுமே ஒரு விஷயம் தெரியும் என்ற மனநிலை
5. பழமையை வரலாற்றை விரும்புபவரா..
ஆற்றல் நிறை - வழிகாட்டுவது. புகழ்வது.
ஆற்றல் குறை - குறை சொல்வது. குற்ற உணர்வு தருவது.
6. உழைப்பை விரும்புபவரா
ஆற்றல் நிறை - கடின உழைப்பு. தயாள மனம். அனைவருக்கும் உதவுவது.
ஆற்றல் குறை - சந்தேகம். தயக்கம். பயம்
7. அறிவு ஜீவியா
ஆற்றல் நிறை - நினைவு சக்தி. அனைத்தையும் நினைவில் நிறுத்தி அதன் மூலம் உதவுவது. அறிவின் மூலம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது. நல்ல படிப்பு. திறமை.
ஆற்றல் குறை - அறிவுத்திமிர். ஒவ்வொருவரை பற்றியும் எதிர்மறை நினைவுகளை அதிமாக்கிக்கொள்வது.. சுயநலம். பதற்றம். எதிர்காலம் குறித்த பயம்.
8. தீர்வு சொல்பவரா
ஆற்றல் நிறை - பிரச்சனை என்று யார் வந்தாலும் எப்படியாவாது தீர்வு சொல்வது.
ஆற்றல் குறை - தீர்வை விட்டு விட்டு பிரச்சனையை நோக்குவது.
வாழ்க்கையே பிரச்சனை என்று நினைப்பது.
9. அழகு விரும்புபவரா
ஆற்றல் நிறை - தானும் தன்னை சுற்றியவை அனைத்தையும் அழகாக பார்ப்பது. அழகாக்குவது.
ஆற்றல் குறை - அழகின்மையை வெறுப்பது. அழகுத்திமிர்.
*******
இந்த பட்டியலை பல நூறு மடங்கு அதிகமாக்க வேண்டும். புரிந்துகொள்ளும் பொருட்டு சுருக்கமாக தந்திருக்கிறேன். ஆனால் பிரிவுகள் இந்த 9க்குள் தான் வரும்.
எல்லாவற்றையும் படியுங்கள். எந்த எந்த நிறை குணம் நேர்மறை குணம் இருக்கிறதோ அதை எதிர்மறையிலும் உங்களுடைய குணம் தென்பட்டால் ...
இனி எதிர்மறை குணத்தை செய்யத்தோன்றும் பொழுது நிதானித்து அந்த இடத்தை தவிர்த்து உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்து ஆற்றலை ஏற்றிக்கொண்டு மீண்டும் சிந்தியுங்கள். அப்பொழுது நேர்மறை குணமே மிஞ்சும். எதிர்மறை இருக்காது. அந்த நேர்மறையை மற்றவருக்கு தாருங்கள்.
இதை நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்தால் நேர்மறை ஆற்றல் மேலோங்கி எதிர்மறை ஆற்றல் குறையத்துவங்கும்.
****
எது நேர்மறை எது எதிர்மறை என்ற குழப்பம் வந்தால் , அது இன்னொருவரை சந்தோஷப்படுத்துகிறதா அல்லது நல்ல மாற்றத்தை உருவாக்குகிறதோ அது நேர்மறை ஆற்றல். இன்னொருவரை கஷ்டப்படுத்துகிறதா அல்லது சிக்கலை ஏற்படுத்துகிறதோ அது எதிர்மறை ஆற்றல்.
முக்கியக்குறிப்பு - நான் கூறும் எதை செய்யும் பொழுதும் அது உங்கள் அகத்திற்கு நிறைவைத் தர வேண்டுமே தவிர குறையைத்தரக் கூடாது. உங்களை கஷ்டத்தில் ஆழ்த்தி நான் எதையும் எப்பொழுதும் செய்யச்சொல்லமாட்டேன். கொஞ்சம் நிதானிக்க மட்டுமே கூறுவேன். கவனம் தேவை. குழப்பம் இருந்தால் இங்கே கேளுங்கள். அல்லது மடல் ( thiru@timescience.org) அனுப்புங்கள்.
நன்றி
திரு
#Thiru #thirulakshman