Monday, December 7, 2020

திரு. லக்ஷ்மண்

ஆற்றலை சேமிப்பது எப்படி?- 1 - கோபத்தை விடுதல்

முன் சுருக்கம் :
ஆற்றல் குறையும் பொழுது நாம் எதிர்மறை எண்ணங்களால் உந்தப்படுகிறோம்.ஆற்றல் அதிகமாகும் பொழுது நாம் நேர்மறை எண்ணங்களால் உந்தப்படுகிறோம்.

ஆற்றல் குறைய குறைய சாத்தான் தன்மையை அடைகிறோம்..
ஆற்றல் அதிகமாக அதிகாமாக கடவுள் தன்மையை அடைகிறோம்..

உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் ஆற்றலை சேமித்து கடவுள் தன்மையை அடைய முடியும்.   அதனால் தயங்காமல் ஒவ்வொரு வழியாக கடைபிடியுங்கள். வாழ்க்கையில் நிம்மதி பரவும்.

ஆற்றல் குறித்து இரண்டு பகுதிகளாக  எழுதியிருக்கிறோம். அடுத்த கட்டமாக ஆற்றலை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்..

*****

ஆற்றலை சேமிப்பதில் முதல் கட்டம் ஆற்றல் வீணாவதை தடுக்க வேண்டும். புதிதாக சேர்ப்பதை விட இருப்பதை காப்பது தான் முதல் அவசியம்.

நாம் ஆற்றலை இழப்பதில் முதல் பங்கு கோபத்திற்கு உள்ளது.

வேதாத்திரி மகரிஷி கூறும் பொழுது கோபமும் கவலையும் ஆற்றல் இழப்பை மிக விரைவாக செய்துவிடுவதாக கூறுவார்.

கோபம் வரும் பொழுது அது எந்த காரணமாக இருந்தாலும் உங்கள் பக்கம் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் கோபப்படவே கூடாது.

கோபப்படத்துவங்கும் பொழுது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றும். ஆனால் கோபப்பட்டு முடியும் பொழுது நம்முள் இருக்கும் ஆற்றல் மொத்ததையும் இழந்துவிடுவோம்.

சூரியனாக இருந்தால் - நீங்க சொன்னதை யாரும் செய்யவில்லை என்றால் கோபம் வரும். உங்களிடம் கேட்காமல் முடிவெடுத்தால் கோபம் வரும். உங்களை  சார்ந்திருக்கும் மக்கள் உங்களுக்கு எதிராக திரும்பினால் கோபம் வரும்.

சந்திரனாக இருந்தால் - நீங்கள் அசைப்பட்டது நடக்கவில்லை என்றால் உங்களை காக்கவைத்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கோபம் வரும்.  உங்கள் அன்பை உதாசினப்படுத்தினால் கோபம் வரும்.

செவ்வாயாக இருந்தால் - எல்லா செயலின் அடிப்படையும் தைரியம் இருக்கும். தாழ்ந்தால் கோபம் பழிவாங்கும் குணமாக மாறும்.

ராகுவாக இருந்தால் - சாப்பாடு சரியாக கிடைக்கவில்லை என்றால் கோபம் வரும்.

குருவாக இருந்தால் - பிறர் ஒழுங்காக இல்லையென்றால் கோபம் வரும். நேரம் தாழ்த்திவிட்டால்  கோபம் வரும்

சனியாக இருந்தால் - வீட்டில் யாரும் வேலை சொன்னால் கோபம் வரும் ( office ல் மாங்கு மாங்கு என்று வேலை செய்யப்பிடிக்கும் )

புதனாக இருந்தால் - உங்களை கடின உழைப்புக்கு தள்ளினால் கோபம் வரும். பத்து ரூபாய் செலவு செய்து 8 ரூபாய்க்கு வரவு வைத்தால் கோபம வரும். உங்களை தகாத வார்த்தைகளில் பேசினால் கோபம் வரும்.

கேதுவாக இருந்தால் - உங்கள் தீர்வை யாரும் மதிக்கவில்லை என்றால் உங்கள் உண்மையை யாரும் சந்தேகப்பட்டால் கோபம் வரும்.

இதில் ஒரு கோடு மட்டுமே காட்டியுள்ளேன். நிறைய விஷயங்களை சேர்க்க வேண்டும்.

****

கோபத்தை அடக்ககூடாது. அது ஆபத்தானது. அதை மொத்தமாக தவிர்க்க வேண்டும்.

கோபம் வந்தவுடன்.. 

1. எதிராளி ஆற்றல் குறைவில் உள்ளார். அதனால் அவர் அப்படி நடந்து கொண்டார். மற்றபடி அவர் நல்லவர் தான். அவரை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். 
2. அவரிடம் இருந்து விலகி இருங்கள். அது தவறில்லை. ஆனால் வெறுக்காதீர்கள். 
3. கோபத்துடம் இருக்காதீர்கள். கோபம் உங்கள் மனதை விட்டு உடனடியாக செல்லவேண்டும்.
4. உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். நீர் அருந்துங்கள். 
5. அவர் செய்த நல்லவைகளை பற்றி சிந்தியுங்கள். 

கோபம் வந்த மறுகணம் உங்களுக்குள் இருக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். நாம் ஆற்றலை இழக்கப்போகிறோம். மீண்டும் இந்த ஆற்றலை பெற ஒரு வாரம் ஆகும். இப்படி இதை இழந்து நாம் நிரூபிக்க ஏதுமில்லை.

பயிற்சி :

முதலில் பதினைந்து நாட்கள் முயற்சி செய்யுங்கள். அது பற்றி அதில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் எனக்கு எழுதுங்கள். என்னால் முடிந்த அளவு உங்களுக்கு வழிகாட்டுகிறேன். எப்பாடு பட்டாவது கோபத்தை மொத்தமாக நீக்கி நிம்மதியை பேரிண்பத்தை அடைந்திடும் வைராக்கியத்தை மட்டும் கைகொள்ளுங்கள்.

இந்த பயிற்சியில் என்னுடன் இனைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்தையும்   உங்களுக்கு எந்த எந்த விஷயத்தில் கோபம் வரும் என்பதை comment ல் கூறுங்கள். அல்லது என்னுடைய mail க்கோ ( thiru@timescience.org அல்லது https://gdpd.xyz/thirulakshman kubool id க்கோ தெரிவியுங்கள். 

நான் அதற்கான விளக்கத்தை சரியாக பார்க்க வழி கூறமுயற்சிக்கிறேன். ஆனால் எதுவாகினும் கோபம் கொள்ளக்கூடாது என்று முடிவு செய்துவிடவேண்டும்.

No comments:

Post a Comment

நன்றி....