இசைக்கவி ரமணன் ஐயாவின் ஒரு பாடலை இன்று பதிவிட விரும்புகிறேன்..
மனசை வாட்டுறது ரோசனை தானே
மனுசனை ஓட்டுறது வாசனை தானே
விருப்பும் வெறுப்பும் வெறும் ஞாபகம் தானே
வேஷம் மறந்து போன வேதனை தானே
(மனசை)
அந்தரத்து மேடையிலே நூலும் கையும் இல்லாம
ஆடாம ஆட்டும் ஒரு பொம்மலாட்டம்
பார்க்க ஆருமில்லே ஊரெல்லாம் மேடையிலே
அவனவன் பாட்டுக்கு ஆடும் ஆட்டம்
எழுந்தா கொண்டாட்டம்
விழுந்தா திண்டாட்டம்
இடையிலே ஒருத்தி மட்டும் சிரிக்கிறாளே வண்டாட்டம்
(மனசை)
ஆடாத குடத்துத் தண்ணி அறியாம எறிஞ்ச கல்லு
ஆளைத் துரத்துதம்மா அலைஅலையாக
ஆகாசம் கணக்கு தம்பி காசால மாறாது
ஆசை பின்னுதம்மா வலைவலையாக
நட்சத்திரம் விழுகையிலே குச்சிவீடு லாபமில்லே
நாடகம் முடிச்சபின்னே மீசையிலே ரோசமில்லே
மூடினா உலகமில்லை முழிச்சா கனவுமில்லை
(மனசை)
ஆட்டு மந்தை மாநாடு நாட்டாமை போட்டி பாரு
கோவணத்தைக் கட்டிக்கிட்டு சிரிக்கிறாரு கோனாரு
கண்டதே காட்சியின்னு சண்டை ரொம்ப வளர்ந்திருச்சு
எருமைக்கு ஏப்பம் வந்து எம்புறாரு எமனாரு
மனுசனைக் கெடுக்கிறது நினைப்பு ஒண்ணு தான்
நினைப்பை நிறுத்திப்புட்டா நிசமும் ஒண்ணு தான்
சொல்லாம விளங்குதில்லே
சொல்லி அவனும் கேட்டதில்லே
( மனசை)

No comments:
Post a Comment
நன்றி....